உள்ளடக்கத்துக்குச் செல்

ராண்டார் கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராண்டார் கை
பிறப்புமாதபூஷி ரங்கதுரை
(1937-11-08)8 நவம்பர் 1937
இறப்புஏப்ரல் 23, 2023(2023-04-23) (அகவை 85)
சென்னை
தொழில்திரைப்பட வரலாற்றாளர், எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
கல்வி நிலையம்சென்னைப் பல்கலைக்கழகம்
காலம்1967-2023
கருப்பொருள்தமிழ்த் திரைப்படங்கள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஸ்டார்லைட் ஸ்டார்பிரைட்
எ ஹிஸ்ட்ரி ஆஃப் தமிழ் சினிமா

ராண்டார் கை (Randor Guy, 8 நவம்பர் 1937 – 23 ஏப்ரல் 2023) ஒரு திரைப்பட மற்றும் சட்ட வரலாற்றாளர்.[1] இவரது இயற்பெயர் மாதபூஷி ரங்கதுரை.[2][3][4] ராண்டார் கை என்பது ரங்கதுரையின் (Rangadorai) ஆங்கில வடிவின் கரந்துறைமொழி. இவர் திரைக்கதாசிரியர், இயக்குநர், நடிகர் என்று பன்முகப் பரிமாணம் கொண்டவர்.[5]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

சிறுவயதில் நெல்லூரில் பள்ளிப்பருவ சமயத்திலேயே விஷ்ணுஜித் என்ற நாடகத்தை எழுதி இயக்கியவர். நாகேஸ்வரராவை அறிமுகப்படுத்திய பிரதிபா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பலராமையாவின் சகோதரர் கண்டசாலா ராதாகிருஷ்ணையாவின் நாட்டிய மண்டலி அமைப்பின் பக்த ராமதாஸ் நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார்.[5]

ராண்டார் கை சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். சிறிதுகாலம் கழித்து பேட்டர்சன் அன்கோ என்ற நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1976ல் எழுத்துப்பணியில் முழுமையாக ஈடுபடுவதற்காக அந்த வேலையிலிருந்து விலகினார்.[6][6][7]

திரைப்பட வரலாற்றாளராக

[தொகு]

ராண்டார் கை 1967லிருந்து திரைப்படம் மற்றும் வரலாற்றுப் புத்தகங்கள் எழுதி வந்தாலும் இவர் எழுதிய ஃப்ராங்க் காப்ரா (அமெரிக்க திரைப்பட இயக்குநர்) பற்றியக் கட்டுரையை அமெரிக்க நாட்டின் செய்தி அமைப்பு உசாத்துணைக்காக வாங்கிய பின்புதான் இவர் பிரபலமானார். அமெரிக்க அரசாங்கத்தால் உசாத்துணையாக்கப்பட்டப் படைப்புகளை எழுதியவர்களில் இவர் ஒருவர் தான் அமெரிக்கர் அல்லாதவர்.[6]

இவர் மயிலாப்பூர் டைம்ஸ், தி ஹிந்து மற்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள்களில் பத்தியெழுத்தாளராக உள்ளார். திரைப்பட இதழ் ஸ்கீரினிலும் எழுதுகிறார். திரைப்பட வரலாற்றாளராகவும் விமரிசகராகவும் பிரபலமடைந்திருந்தாலும் இவர் பல துறைகளிலும் எழுதி வருகிறார்.

திரைப்படங்கள்

[தொகு]

ராண்டார் கை சில திரைப்படங்களுக்கும் குறு ஆவணப்படங்களுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார். சில விளம்பரப் படங்களும் தயாரித்துள்ளார். ஒரு ஹாலிவுட் திரைப்பட நிறுவனத்திற்காக 100நிமிடங்கள் ஓடக்கூடிய பெர்ஃப்யூம்ட் கார்டன் என்ற ஆங்கில திரைப்படத்தை 1999ல் அவர் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் ”பிரம்மச்சாரி” என்ற பெயரில் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது. பாரடைஸ் பீக் என்ற சிங்கள திரைப்படத்துக்கு கதை எழுதியிருக்கிறார். அத்திரைப்படக்கதை அவரது கதைகளிலேயே அதிகம் விற்பனையான ஒரு கிரைம் நாவலின் கதையாகும். தற்சமயம் நடிகை நமீதா நடிக்கும் மாயா என்ற திரைப்படத்துக்குத் திரைக்கதை எழுதுகிறார். இப்படம் நமீதாவிற்கு முதல் ஆங்கிலப் படமாகும்.[7][8]

விருதுகள்

[தொகு]

நவம்பர் 12, 2007ல் சமுத்ரா பத்திரிக்கையின் ஐந்தாவது ஆண்டு விழாவில் அவரது கலைப்பணியைப் பாராட்டி அவருக்கு "ஞான சமுத்ரா" விருது வழங்கப்பட்டது.[9]

எழுதிய புத்தகங்கள்

[தொகு]
  • வொயில் தி பிரேக்கர்ஸ் ரோர்ட் - 1967(புனைவு)
  • இந்தியன் ரிபால்ட்ரி - சி. இ. டட்டில் கோ (1970)
  • சாயா - 1980. (புனைவு - தெலுங்கு)
  • காசி - 1981 (புனைவு - தெலுங்கு)
  • மாதுரி ஒரு மாதிரி - 1982 (உண்மை குற்றச் சம்பவம் - தமிழ்)
  • பி. என். ரெட்டி - எ மோனோகிராஃப் - இந்திய தேசிய திரைப்பட ஆவணக்காப்பகம் (1985)
  • தமிழ் சினிமா வரலாறு - 1991 (தமிழ்நாடு அரசு வெளியீடு)
  • ஸ்டார் லைட், ஸ்டார் பிரைட்: தி எர்லி தமிழ் சினிமா - அம்ரா பப்ளிஷர்ஸ் (1997)
  • ம்ர்டர் ஃபார் பிளஷர். 1972 (புனைவு)
  • சிட்டாலே (வாழ்க்கை வரலாறு)
  • மான்சூன் - 1997 (இந்தியாவில் எடுக்கப்பட்ட ஒரு ஹாலிவுட் படத்தின் புதினம்)

மறைவு

[தொகு]

ராண்டார் கை தனது 85-ஆவது அகவையில் 2023 ஏப்ரல் 23 இரவு சென்னையில் காலமானார்.[10][11][12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Vasudev, A. (1988). Cinemaya: the Asian film magazine. p. 61.
  2. Varma, Shreekumar (November 13, 2007). "Remembrance of things past". The New Indian Express:Sunday Headlines இம் மூலத்தில் இருந்து 2006-03-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060309001557/http://www.newindpress.com/sunday/colItems.asp?ID=SEF20020614063036. பார்த்த நாள்: 2008-07-25. 
  3. Bhushan, Ravi (2007). Reference India. Rifacimento International. p. 106.
  4. Dutt, K. C. (2001). Who's who of Indian Writers, 1999: A-M Vol 1. Sahitya Akademi. p. 439. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8126008733. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  5. 5.0 5.1 அமுதசுரபி தீபாவளி மலர் 2004; ராண்டார் கையின் திரையுலகம்; பக்கம் 140
  6. 6.0 6.1 6.2 "The GUY called RANDOR". sify.com. பார்க்கப்பட்ட நாள் 2008-07-21.
  7. 7.0 7.1 Fernandez, p 164
  8. "Sensuous Namitha sizzles in Maya". yahoo.com. பார்க்கப்பட்ட நாள் 2008-07-25.
  9. "‘Gnana Samudhra’ award for Randor Guy". The Hindu: Tamil Nadu/Chennai News. November 13, 2007 இம் மூலத்தில் இருந்து 2007-11-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071116050729/http://www.hindu.com/2007/11/13/stories/2007111368360600.htm. பார்த்த நாள்: 2008-07-23. 
  10. "Veteran columnist, author and film historian Randor Guy no more". தி இந்து. 24 April 2023. https://www.thehindu.com/news/national/tamil-nadu/veteran-columnist-author-and-film-historian-randor-guy-no-more/article66772661.ece. 
  11. "Chronicler of Madras Randor Guy passes away". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 April 2023. https://timesofindia.indiatimes.com/city/chennai/chronicler-of-madras-randor-guy-passes-away/articleshow/99744021.cms. 
  12. "Popular historian Randor Guy dies at 86". DT Next. 25 April 2023. https://www.dtnext.in/city/2023/04/24/popular-historian-randor-guy-dies-at-86. 

உசாத்துணைகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராண்டார்_கை&oldid=4159311" இலிருந்து மீள்விக்கப்பட்டது